அப்பொழுது கையில் காசே இருந்தது இல்லை
எதற்கும் மனம் துன்பத்தில் அழ்ந்ததில்லை
விடுமுறை வருவதை மனம் விரும்பவில்லை
நண்பர்கள் பிறந்தநாள் மறந்ததில்லை.
இப்பொழுது என்ன நம்மிடம் இல்லை
நம்மை பற்றி யோசிக்க நேரம் இல்லை
சந்தோசம் நம்மிடத்தில் இல்லை
காலம் முழுதும் கணினிமுன் அமர விருப்பம் இல்லை
நாம் நாமாக இல்லை
நண்பர்கள் பக்கத்தில் இருந்தார்கள் பேசியே தொலைத்தோம் காலத்தை
பலர் வியந்தனர் நம்மை கண்டு
நண்பர்கள் தொலைவில் இருக்கிறார்கள் தொலைபேசியில் பேச காலம்இல்லை
வியக்கிறேன் காலத்தின் வேகத்தை கண்டு
என் வேலை, என் கடந்த கால கனவு
அது நிகழ் கால நடப்பு
அதன் மேல் இப்பொழுது இல்லை பிடிப்பு
எப்பொழுது காலம் இதில் இருந்து கொடுக்கும் விடுப்பு
காலம் - எதற்கும், எவருக்கும் நின்றதில்லை
காலம் - நிற்கிறதா செல்கிறதா என்று தெரியவில்லை
தெரியாமல் தேர்ந்தெடுத்தேன் இந்த வேலையை
புரியாமல் தவிக்க வைப்பதுதான் கடவுளின் லீலயோ?
காலத்தின் வேகத்தில் தொலைத்த நட்புகளை
ReplyDeleteதேடிச்செல்ல மனம் இருந்தும்
தேடாமல் விட்டுவிட்டேன்
காரணம் இல்லாமலே
உங்கள் கவிதையை படித்ததும்
உடல் சிலிர்த்தது மனம் வலிக்குது
நண்பர்களை காண