Wednesday, August 11, 2010

என்ன தவம் செய்தேன்?

கருவில் உருவானேன், தாயே உன் எண்ணம் அனைத்திலும் எனக்கு பங்கழித்தாய்
உலகில் பிறந்தேன், உன் உலகத்தையே எனக்கு பரிசழிதாய்
பள்ளிக்கு சென்றேன், என் தோழியாய் அனைத்தும் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரம் கொடுத்தாய்
கல்லூரியில் சேர்ந்தேன், என் கல்விக்கு வேண்டிய ஊக்கம் தந்தாய்
உத்தியோகத்தில் உள்ளேன், இன்னும் ஒரு குழந்தையை போல் ஊட்டவும் செய்தாய்
கருவில் மட்டும் நீ எனக்கு, நான் கேட்காமல் உணவு அளிக்கவில்லை - என் வாழ்கை முழுவதும்
உன் உழைப்பால் நான் கல்வி பெற்றேன், என் வாழ்கை முழுதும் உன் உழைப்பை சமர்பித்தாய்
என்னிடம் என்ன எதிர் பார்த்து நீ இதை எல்லாம் செய்தாய்?
என்ன தவம் செய்தேன், தாயே உன் கருவில் நான் உருவாக

1 comment:

  1. //உணவு அழிக்கவில்லை// Check the spelling

    ReplyDelete