Thursday, August 19, 2010

Dear Friend...

Friend,

I m proud to be your friend,
Hope there will be no end,
Even though lot of changes in life trend,
You will always be my best friend.

Time may separate us in distance but
I will remember you in every instance.

என்னுள் தோன்றியவை விமர்சிக்க வேண்டியவை

தோழி என்று நான் சொன்னால் ஏற்கும் சமுதாயம் தோழன் என்று சொன்னால் ஏற்காதது ஏன்?
சிறு வயதில் வித்தியாசம் இல்லாமல் விளையாடும் நாம் இப்பொழுது பார்த்தால் பார்க்காமல் செல்வது ஏன்?
தோழனுடன் பழகுவதே குற்றம் என்பது ஏன் ?
வயதானவர்கள் தான் இந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என்றால் இல்லை,
இளைய சமுதாயமும் இதே கண்ணோட்டத்துடன் பார்ப்பது ஏன் ?
உறவை நமக்கு சரியாக சொல்லி வளர்க படவில்லையா?
இல்லே இந்த உறவே தவறேன்கிறதா தெரியவில்லை?

கல்லுக்குள் சிறப்பமாய்

வெறும் கல் என்று நினைத்தேன்... ஆனால்...
நீயோ பார் போற்றும் சிற்பமானாய் 
கோவிலில் !!!

Wednesday, August 11, 2010

கல்லூரியும் கணினி வேலையும்

அப்பொழுது கையில் காசே இருந்தது இல்லை
எதற்கும் மனம் துன்பத்தில் அழ்ந்ததில்லை
விடுமுறை வருவதை மனம் விரும்பவில்லை
நண்பர்கள் பிறந்தநாள் மறந்ததில்லை.

இப்பொழுது என்ன நம்மிடம் இல்லை
நம்மை பற்றி யோசிக்க நேரம் இல்லை
சந்தோசம் நம்மிடத்தில் இல்லை
காலம் முழுதும் கணினிமுன் அமர விருப்பம் இல்லை
நாம் நாமாக இல்லை

நண்பர்கள் பக்கத்தில் இருந்தார்கள் பேசியே தொலைத்தோம் காலத்தை
பலர் வியந்தனர் நம்மை கண்டு
நண்பர்கள் தொலைவில் இருக்கிறார்கள் தொலைபேசியில் பேச காலம்இல்லை
வியக்கிறேன் காலத்தின் வேகத்தை கண்டு

என் வேலை, என் கடந்த கால கனவு
அது நிகழ் கால நடப்பு
அதன் மேல் இப்பொழுது இல்லை பிடிப்பு
எப்பொழுது காலம் இதில் இருந்து கொடுக்கும் விடுப்பு

காலம் - எதற்கும், எவருக்கும் நின்றதில்லை
காலம் - நிற்கிறதா செல்கிறதா என்று தெரியவில்லை
தெரியாமல் தேர்ந்தெடுத்தேன் இந்த வேலையை
புரியாமல் தவிக்க வைப்பதுதான் கடவுளின் லீலயோ?

என்ன தவம் செய்தேன்?

கருவில் உருவானேன், தாயே உன் எண்ணம் அனைத்திலும் எனக்கு பங்கழித்தாய்
உலகில் பிறந்தேன், உன் உலகத்தையே எனக்கு பரிசழிதாய்
பள்ளிக்கு சென்றேன், என் தோழியாய் அனைத்தும் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரம் கொடுத்தாய்
கல்லூரியில் சேர்ந்தேன், என் கல்விக்கு வேண்டிய ஊக்கம் தந்தாய்
உத்தியோகத்தில் உள்ளேன், இன்னும் ஒரு குழந்தையை போல் ஊட்டவும் செய்தாய்
கருவில் மட்டும் நீ எனக்கு, நான் கேட்காமல் உணவு அளிக்கவில்லை - என் வாழ்கை முழுவதும்
உன் உழைப்பால் நான் கல்வி பெற்றேன், என் வாழ்கை முழுதும் உன் உழைப்பை சமர்பித்தாய்
என்னிடம் என்ன எதிர் பார்த்து நீ இதை எல்லாம் செய்தாய்?
என்ன தவம் செய்தேன், தாயே உன் கருவில் நான் உருவாக

Tuesday, August 10, 2010

நட்பு

நண்பனே நட்பில் எதிர்பார்ப்புகள் கூடாது - ஆனால்
நான் ஒன்றை எதிர் பார்கிறேன்
என் உயிர் இருக்கும் வரை என் நண்பனாய் இரு என்று